Monday, December 28, 2009

யுத்தமும் சில ஆயத்தங்களும்...

விருப்பப்புள்ளியில்
இருந்து விலகியதாய்,
ஆயுதக்கிடங்கில் தளவாடங்கள்
சேர்க்கிறாய்

வெஞ்சின சமரில்
தோற்றதாய் புழுங்கி
யானைகளையும், குதிரைகளையும்
உரமாக்குகிறாய்

வர்ணங்களில்
ஆர்வமாய் சிவப்பை
அணிந்தும் பூசியும் கொள்கிறாய்

வனவெளி நெருப்பை
கண்களில் நிறுத்தி
விரிசடை சிலுப்பி
நாவின் முனையை
சானை பிடிக்கிறாய்

வெறுப்பின் நகங்கள்
வளர்த்து பிரியம் கிழிக்க
காத்திருக்கிறாய்

அதற்குள்
நான் தயாராக வேண்டும்....

கொஞ்சம்
அன்பு
மெல்லிய
புன்னகை
இன்னும்
பூக்களுடன்

3 comments:

பா.ராஜாராம் said...

அதற்குள்
நான் தயாராக வேண்டும்....

கொஞ்சம்
அன்பு
மெல்லிய
புன்னகை
இன்னும்
பூக்களுடன்


எவ்வளவு அழகான மனசு இந்த "நான்" அற்ற நான்-னுக்கு!

முரண்களை உந்த புள்ளியில் குவிப்பதில்,நான் ரொம்ப பிடிச்சு
போகுது ராகவன்!

உயிரோடை said...

அன்பை விட‌ பெரும் வ‌ன்முறை என்ன‌ இருக்க‌ முடியும்?

காமராஜ் said...

அதானே, சரியாச் சொன்னீங்க லாவண்யா. கோபம் வந்தால் கொட்டிவிட வேண்டும். அலைபோல கரை வைத்துக்கொண்டு.
அப்புறம் நேர்செய்துகொள்ளலாம். பயணப்படும் எழுபது கிலோமீட்டரும் பலிங்குப்பாதையாக இருந்தால் சலிப்பு வந்து தூங்கிவிட நேரிடும்.
கவிதை நல்லாயிருக்கு நண்பா, என் அன்பு நண்பா.