நான் கிறக்கத்தில் இருந்த பதின் நாட்களின் இருபட்டிகளிலும் பாஸ்பரஸ் தடவி மனசெங்கும் பற்றி எரிந்த காலங்களில் பூத்த ஜுவாலாமுகிகள் என்னுடைய இந்த கவிதைகள்... இதை பதிய அநேக ரிசர்வேஷன் இருந்தது... அதை மீறி என்னை பதியச் சொன்னவன் ரவி, என் பால்யத்தின் தெருக்களில் புழுதி அப்பி கிடந்தவர்களில் முக்கியமானவன், அவன் காதலை சொல்ல பின்குரலாய் இருந்த கவிதையில் இதுவும் ஒன்று...
ஒரே ஊரில் இருக்கும் உறவுக்காரப்பென்னை மயக்க தேவையான கவிதைக்கணங்கள் அடர்த்தியாய் இருந்த நாட்களில் உருகி உருகி எழுதிய எல்லோருக்கும் பொதுவான காதலை, காதலிகளை தலை தடவி கூந்தல் கோதி சரித்த மசி, இன்னும் அப்பி கிடக்கிறது கைகள் எங்கும். அப்பிய மசியில் வைத்த கைநாட்டு கவிதை ஒன்று கீழே:
கொடிகம்பியில் ஜனித்த
மழையின் மிச்சங்கள்
ஒரு ஸ்படிக மாலையின்
நீள் வசமாய் இருந்தது
கிணற்றடியும், துவைகல்லும்
கழுவி விட்டது போல்
ஒன்றுகொன்று முகம்
பார்த்துக் கொண்டிருந்தது
லேசாய் தளுக்கு காட்டி
சிரித்த செடிகளின்
கண்களில் தேங்கி நிற்கிறது
சிந்தாத துளிகள்
புதியதாய் முளைத்திருந்த
கனகாம்பரத்தின் நிறம்
வாசனையாய் பரவி இருந்தது
முன் தின மழையை
உடலெங்கும் போர்த்தி
குளிர் காயும்
மண்ணில்
அவள் கால் வைக்க
தேங்கிய தண்ணீர்
ஆவியாகி மறுபடி ஜனிக்கும்
பருவ கால மழையாய்
கருப்பு காளான் பிடித்து
வாயில் பிரஷ்ஷுடன்
நீலத்தாவணி, வெள்ளை
ரவிக்கையில் சோம்பல் முறித்தவள்
மழை ஞாயிறை மேலும்
குளிர்வித்தாள்
27 comments:
கையில் அப்பிய மசி, ஸ்படிகமாலை, இலைகளில் தங்கிய கண்ணீர், கருப்பு காளான் இதெல்லாம் கவிஞனுக்கு காணக் கிடைப்பதுதான்.
கனகாம்பர நிறத்தின் வாசமும் கிடைத்தது ஆச்சரியம் !! அழகு கவிதை.
ராகவன் அண்ணே...
பதின் பருவத்து கவிதை நல்லா இருக்கு.
//அவள் கால் வைக்க
தேங்கிய தண்ணீர்
ஆவியாகி மறுபடி ஜனிக்கும்
பருவ கால மழையாய்
//
சிறப்பு.
செம 'ரொமாண்டிக் மூட்'ல திரிஞ்சுட்டு இருந்திருக்கீங்க போல!!! :))
தூவானமாய் நினைவுகள் .....இனிமை.
//ரவிக்கையில் சோம்பல் முறித்தவள்
மழை ஞாயிறை மேலும்
குளிர்வித்தாள்//
இந்த இடம் அந்த சூழலோடு மனதை குளிர்விக்கிறது... அருமை...
/அப்பிய மசியில் வைத்த கைநாட்டு கவிதை ஒன்று கீழே: /
அழகிய கை நாட்டு!
பதின்பருவத்திலேயே இத்தனை அழகான கவிதையா?
நல்லாயிருக்கு.
இப்போதே மழை வேண்டும் போல உள்ளது .உங்கள் கவிதையின் சிறப்பே எங்களை அங்கே கொண்டு போய் உட்காரவைத்து விடுவது தான் .எங்கோ மிதந்து போய் விட்டேன் ராகவன் .
கவிதையின் முதல் பத்தி.. உங்கள் முன்னுரை அழகுங்க... ராகவன்
அட!
ராகவன்
முழுமை ! நகர்ந்து விட்டது கவிமொழியின் தளம் ...
வாழ்த்துகள்
திரும்ப வந்து படிக்கிறேன் ராகவன் .இந்த வாரம் பாமரன் ,ஆதிரன் ,மற்றும் ராகவன் போஸ்ட்ஸ் அடிக்கடி வாசிச்சேன் .
"ஒரு ஸ்படிக மாலையின்
நீள் வசமாய் இருந்தது"
அழகு அழகு
கண்களில் தேங்கி நிற்கிறது
சிந்தாத துளிகள்
அதை போய் உலுக்கி நனைந்திருக்கிறீர்களா?
முன் தின மழையை
உடலெங்கும் போர்த்தி
குளிர் காயும்
மண்ணில்
என்ன அழகாய் இருப்பாள் மண்மகள் ஆழ்ந்த பிஸ்கட் கலரில்
நீலத்தாவணி வெள்ளை ரவிக்கை
யூனிபாரம் அந்த கலரா?
கலக்கிடீங்க ராகவன்
அப்போதே ஆரம்பித்தாயிற்றா...
நீலத்தாவணிகளும்., வெள்ளை ரவிக்கைகளும்..,மழைநாளும் மனதை பிசைகிறது ராகவன்..
கனகாம்பர வாசனை..
:-)))
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
http://www.thalaivan.com/button.html
Visit our website for more information http://www.thalaivan.com
அன்பு விதூஷ்,
உங்கள் அளவற்ற அன்புக்கு பதிலாய் அன்பும், நன்றிகளும். என் பின்னூட்டங்களை எதிர்பார்த்து நீங்கள் படிப்பதாய் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. பாராவின் கவிதையின் வாசிப்பை விட பன்மடங்கு உங்கள் பின்னூட்டம் என்னை சந்தோஷப்படுத்தியது. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தேனோ என்னமோ... தோன்றியதை எழுதினேன்.
தொடர்ந்து வரவிழைகிறேன்.
அன்புடன்
ராகவன்
சிவா,
உன் கூட இன்னைக்கு பேசியது எனக்கு சந்தோஷமாய் இருந்தது... எவ்வளவு சந்தோஷம் என்றால், என்னால் சொல்ல முடியவில்லை. நுங்கு பதனீர் சிவா நாம் பேசியது... அத்தனை தித்திப்பு, லேசான பனைமட்டையின் துவர்ப்புடன்...
தொடர்ந்து வா... எழுது... உன் பதிவுகள் படிக்க வேண்டும்... திங்கட்கிழமை உனக்கு எழுதுகிறேன்.
அன்புடன்
ராகவன்
அன்பு ஜெரி,
என்ன ஆளையே கானோம் ரொம்ப நாளா...
எப்படி இருக்கீங்க?
வருகைக்கு நன்றிகள்...
அன்புடன்
ராகவன்
அன்பு சி.பாலாசி,
பாவாடை தாவணியில் ஒரு பெண்ணை இப்போது பார்க்க நான் மதுரை அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் போகவேண்டும் என்று நினைக்கிறேன்.
கிளர்ந்து எழுத எத்தனை இருக்கிறது பதின் பருவ நாட்களில்... உலகம் எல்லாம் பெண்களால் நிறைந்திருந்தது.
படிப்பது, எழுதுவது, உடுத்துவது, பேசுவது, நடப்பது, சிரிப்பது என்று எல்லாவற்றிற்கும் மூலகாரணியாய்... யாதுமாய் நின்றாய் காளீ!
அன்புடன்
ராகவன்
அன்புடன் அருணா,
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல... ஒரே மாதிரி சொல்கிறேன் அன்பையும் என் நன்றியையும்... ஆனால் இவற்றை சொல்லும் போது ஒரே மாதிரி தானே இருக்கும்...
அன்புடன்
ராகவன்
அன்பு அம்பிகா,
சமூகம் சார்ந்த பிரச்னைகள் பற்றி பேச எனக்கு வருவதே இல்லை. நீங்களாக இருக்கட்டும், மாதவராஜாக இருக்கட்டும் சுடசுட ஒரு விஷயத்தை உடனே பேசுகிறீர்கள்... ஒரு சமூக கடமையாய் செய்வது மிக சிறப்பான விஷயம்...
நான் இன்னும் காதலையும், விடலைத்தனத்தையும் தாண்டவில்லை... விடமாட்டேங்குது...
அன்புக்கு நன்றிகள் அம்பிகா,
அன்புடன்
ராகவன்
அன்பு பத்மா,
என்ன சொல்றது பத்மா...
நல் வாசிப்பு உடையவர்களை நட்பாய் பெறுவது சிலாக்கியமான விஷயம்... நான் கொண்டாடவேண்டிய நட்பு உங்களுடையது பத்மா... எத்தனை ஆழமான, அழகான பார்வை உங்களுக்கு. நாச்சியார் சிலைகளில் ஆரம்பித்து இன்று சிதம்பரம் வரை ஞாபக அடுக்குகளுக்குள் இல்லாத் விஷயங்களே இல்லை என்று நினைக்கிறேன். இரண்டு வர்னத்தில் ஒரு பூ (யூனிபார்ம் தான்)அவள்...
மூச்சு முட்டுகிறது பத்மா... பழைய விஷயங்களை திரும்ப அசை போடும்போது நுரை தள்ளிப் போகிறது... ஆனால் பொக்கை வாயில் பொடித்து தின்ன வேண்டியதிருக்கிறது நொறுக்குத்தீனிகள் எப்போதும்
அன்புடன்
ராகவன்
அன்பு அசோக்,
உங்கள் வருகைக்கு நன்றிகள் பல... அன்பும் உங்களின் சென்ஸ் ஆஃப் ஹுயூமர் அசத்தலான விஷயம். நான் ரொம்ப வறட்சியானவன் அசோக்... நகைச்சுவையே கிடையாது, வராது...
அன்புடன்
ராகவன்
அன்பு நந்தா,
முதல் வருகை உங்களுடையது... நான் யாராவது பெங்களூரைப் பற்றி பேசினாலே நான் உங்களைப்பற்றி கேட்பது வழக்கம்... இந்த பதிவுலகில் எனக்கு நிறைய நட்புகள் கிடைப்பதற்கு முன்பாகவே உங்கள் எழுத்து எனக்கு ரொம்ப படித்திருக்கிறேன்... பிரமிப்பாய் இருக்கும்... உசந்து கொண்டே போகும் கண்ணாடி கோபுரங்கள் பார்க்க பார்க்க ஆச்சரியம்... அண்ணாந்து பார்ப்பதோடு சரி...
நன்றிகள் பல நந்தா...
அன்புடன்
ராகவன்
அன்பு நேசன்,
உங்கள் அன்புக்கு நன்றிகள் பல... கூத்தன் ஒரு காலை தூக்கி வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டிருக்கிறார், இன்னும் சரியாக முடிக்காமல், சரியாக ஜதி சொல்லாமல் நிற்கிறார் நேசன்... நான் எழுதிய பிறகு நீங்கள் தொடராமல் விட்டு விட்டீர்கள்... நிறைய பேருக்கு அது வருத்தம்... கவிதையை விட நம் சம்பாஷனை அந்த நிறைய பேருக்கு பிடித்திருந்தது போல...
அன்புடன்
ராகவன்
அன்பு கும்க்கி,
நான் எதிர்பார்த்தது, பயந்தது, மனசின் ஓரத்தில் கள்ளத்தனமாய் நினைத்தது நடந்து விட்டது. கும்க்கி உங்களிடம் பிரச்னையின் ஆரம்பம் மட்டுமே சொன்னேன்... முடிந்து விட்டதா அல்லது இது தான் ஆரம்பமா என்று தெரியவில்லை கும்க்கி... ஆனாலும் அவஸ்தை...
ஆதி மொழி... வேல ராமமூர்த்தி படிச்சு கலங்கி போயிட்டேன்... மிகப்பெரிய பரிசு... கும்க்கி...
அன்புடன்
ராகவன்
இங்கிருந்துதான் கவிதை பிறந்ததா.
திவலைகளோடு, புதுசா இருக்கு.
//லேசாய் தளுக்கு காட்டி
சிரித்த செடிகளின்
கண்களில் தேங்கி நிற்கிறது
சிந்தாத துளிகள் //
அழகு கவிதை..!
கவிதை அழகு..!!
moththamum azhagu......!
Post a Comment