Monday, April 05, 2010

இரவில் ஒளிரும் மரம்...

புதிதாய் உருவான
வணிக வளாகத்திற்க்காய்
வேருடன் பிடுங்கிய மரங்களும்
தரை மட்டத்திற்கு
அறுக்கப்பட்ட மரங்களுக்குமான
துக்கங்கள் வேறுவேறு

பிடுங்கிய மரங்கள்
வேறு எங்காவது நடப்படலாம்
அறுக்கப்பட்ட மரங்கள்
துளிர்க்கலாம்
வாழ்வதற்கான சாத்தியகூறுகள்
இரண்டுக்கும் உண்டு

வேருடன் பிடுங்கிய மரத்திற்கு
பதிலாய் உடலெங்கும்
நட்ச்சத்திரங்கள் முளைத்த
மின்மரத்தை நட்டார்கள்
சிமிண்டில் வேர்செய்து

மரம் போலவே இருக்கு
கூடுதல் ஈர்ப்பு,
புளகாங்கிதம் அடைந்தனர்
நட்டவர்கள்
வணிக வளாகத்தின் வாடிக்கையாளர்கள்
வாய் பிளந்து பார்த்தார்கள்

பிராண வாயு
அதன் இயக்கத்தில் இல்லை
சூர்ய ஒளியை இலைஎங்கும்
மினுக்கி காட்ட தெரியாமல் 
இரவில் ஒளிர்கிறது

விம்மி புடைத்து அழும்
அறுத்த மரத்தின் வேர்கள்
கருகி முடங்கும்
துளிர்க்க துணிவின்றி

பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்
பொசுங்கி போச்சு

16 comments:

பாலா said...

அற்புதமான வெளிப்பாடு ராகவன்
அருமையாய் வந்திருகிறது கவிதை
குறிப்பாய் இந்த வரிகள்
"பிராண வாயு
அதன் இயக்கத்தில் இல்லை
சூர்ய ஒளியை இலைஎங்கும்
மினுக்கி காட்ட தெரியாமல்
இரவில் ஒளிர்கிறது

உயிரோடை said...

ரொம்ப‌ ந‌ல்ல‌ கான்செப்ட். ஆனா இப்பேர்ப்ப‌ட்ட‌ க‌ருவுக்காக‌ க‌விதையில் இன்னும் கொஞ்ச‌ம் மென‌க்க‌ட்டிருக்க‌லாம்

மாதவராஜ் said...

மரம் என்பது வெறும் மரமல்ல. நிலத்தில் கால் பதித்து காற்று, பறவைகளோடு உறவாடும் வாழ்க்கை அதனுடையது. காலம் அதன் உடலில் இருந்து வெளிப்படுகிறது. மனிதர்கள் இன்னும் மரங்களை புரிந்துகொள்ளவில்லை. அர்த்தமுள்ள சொற்சித்திரம்தான் இதுவும்.

Vidhoosh said...

அழகான கவிதைக் களம். இன்னொரு முறை எழுதிப் பாருங்கள் ராகவன். அருமையாக இருக்குங்க. :)

க ரா said...

அருமை ராகவன்

Kumky said...

அன்பு ராகவன்..,

விரையும் கார்களும்., எல்லாவற்றையும் வாங்கத்தூண்டும் ப்ரம்மாண்ட மால்களும்.,எல்லா நிறங்களிலான மனிதர்களும்., இயந்திர வாழ்வும்., கடந்து மரத்தினை பற்றிய உங்களின் பார்வை எனக்கு கொஞ்சம் பறவையின் ஆசுவாசம்..

மரங்கள் மட்டுமின்றி மண்ணும் வாழ்வும் மனிதமும் எல்லாமே வியாபாரமயப்பட்டுவிட்ட இன்றைய நாட்களில் இதுதான் மரம் என்றுகூட நவயுக பெற்றோர்களால் குழந்தைகளுக்கு காண்பிக்க ஏதுவாக இருக்குமோ என்னவோ..

ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு எந்த வாகனத்தில் பயணித்தாலுமே ..சென்று சேர்கின்ற இடம் வந்தவுடன் எதற்காக வந்தோமென்ற நினைப்பு தோன்றுமளவு உள்ளது ராகவன் வாகனங்களால் மூச்சு திணறிக்கொண்டிருக்கும் அந்த நரகம்..

ஸ்விட்ச்சுடன் கூடிய மின்சாதனங்களை போல அத்தனை பேரும் எங்கே ஓடிக்கொண்டிருப்பார்களென்ற எண்ணமும் தோன்றாமலில்லை...

குறைந்தபட்ச புரிதல்களை விரிவாக்கம் செய்யவும், இன்னும் கொஞ்சம் சிலாகிக்கவும் நேரம் கூடிவராததுதான் பெரும் துக்கமே...

இருக்கட்டும் ராகவன்..இங்கே வாருங்களேன்....

Kumky said...

மரங்களையாவது பார்த்து வருவோம் பறவைகளுடன்.....

பா.ராஜாராம் said...

ராகவன்,

just enterd.நேசன்,பிறகு நீங்கள்.

இங்கிருந்து,மாது மற்றும் kaamu ..neram vaaikkirapothu vaasitthu pinoottam.

'பரிவை' சே.குமார் said...

அற்புதமான வெளிப்பாடு ராகவன்
அருமையாய் வந்திருகிறது கவிதை

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லாருக்கு. உங்களுக்கு எப்படி வித்தியாசமான கரு கிடைக்குது.

ரிஷபன் said...

எங்கள் அலுவலக வளாகத்தில் பிடுங்கப்பட்ட மரத்தை வேறு இடம் கொண்டு நட எடுத்துப் போனார்கள்.. வயதான மரம்.. பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள்.. இம்மாதிரி இடம் பெயர்த்து நடுவதை ஒரு சாகசமாய்.. ரொம்ப நாளைக்கு உள்ளே ஏதோ நடுங்கிக் கொண்டிருந்தது.. அந்த காட்சி..

காமராஜ் said...

அருமை ராகவன்.
தலைப்பில் தொடங்குகிறது கவிதை.

பா.ராஜாராம் said...

விடுபட்டதெல்லாம் வாசித்தேன் ராகவன்.

ஒரு ஸ்திரமும் லயமுமாக இருக்கிறது பயணம்.உரை நடை உட்பட!

cheena (சீனா) said...

அன்பின் ராகவன்

இரவில் ஒளிரும் மரம் - சிந்தனை அருமை - கவிதை அருமை - நாம் இன்றைக்கு காலத்தின் கட்டாயத்தால் இயற்கைக்கு எதிராகச் செயல்படுகிறோம் - அது தவறெனப் புரிந்து கொள்ளும் நாள் என்று வருமோ - அன்று தான் நல்ல நாள்.

மரங்களை வேருடன் பிடுங்கி - பதிலாக உடலெங்கும் நடசத்திரங்கள் மின்ன மின்மரம் நடப்படுவது இன்று ஒரு சாதனை ஆகி விட்டது.

கவிஞனின் ஆதங்கம் புரிகிறது - இயலாமை - தடுக்க இயலவில்லை. ம்ம்ம்ம்

அறுத்த மரத்தின் வேர்கள் துளிர்க்கத் துணிவுண்டு அவைகளுக்கு - ஆனால் துளிர்க்க விடுவதில்லை நாம் - கருக்கி விடுகிறோம். என்ன செய்வது ....

நச்சென்ற இறுதிப் பத்தி

//பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்
பொசுங்கி போச்சு //


நல்வாழ்த்துகள் ராகவன்
நட்புடன் சீனா

ரோகிணிசிவா said...

//பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்
பொசுங்கி போச்சு ,,,,//-no comments,
u make us dumb

இரசிகை said...

//பகலில் ஒளிரா மரத்தின்
கிளையில்
கூடுகட்டிய பறவை
இரவின் ஷார்ட் சர்க்யூட்டில்
பொசுங்கி போச்சு //

:(