கடவுளின் நாற்காலிக்கு
போட்டி வந்தது
நடத்தியது என்னமோ
சாத்தான்
கடவுள் மறுப்பேதும்
சொல்லாமல் பேசாமல் இருந்தார்
நிறைய பேர் வந்திருந்தனர்
போட்டியிட
வரிசை கோடியில்
நானும் பூர்த்தி செய்த
விண்ணப்பத்தை வைத்துக் கொண்டு
நின்று கொண்டிருந்தேன்
விண்ணப்பத்தை வாங்கி பரிசீலித்து
போட்டியில் அனுமதிக்க செய்வது
சாத்தானின் ஆட்களின் வேலை
சில ஷரத்துகள்
கடவுளுக்கு ஒவ்வாததாய்
இருந்திருக்க வேண்டும்
தன் ஆட்சேபங்களை
முன்வைத்தார், சாத்தான்
கேட்பதாய் இல்லை
வந்திருந்த கூட்டத்தை
பார்த்ததும் கடவுளுக்கு கொஞ்சம்
வேர்த்து தான் போயிருந்தது
சாத்தானை தனியாக
சந்தித்தார் கடவுள்
ஏதோ உடன்படிக்கை
ஏற்பட்டிருக்க வேண்டும்
சாத்தான் தேர்தலை
ரத்து செய்வதாய் அறிவித்தது
கடவுளுக்கு தன் கடைவாய் பற்களையும்
முட்டி துருத்திய கொம்புகளையும்
தன் வாலையும் கழற்றி கொடுத்தது
சாத்தானின் தலைக்கு மேல்
சுழன்றது ஒளிவட்டம்
17 comments:
நல்லாயிருக்கிறது கிரில்லியனில் மட்டும் தெரியும் ஆரா மாற்றம்
வாழ்த்துக்கள்
விஜய்
தலைப்பு தான் நாற்காலி,நீங்கள் உட்கார்ந்து இருப்பது "சிம்மாசனம்."
அய்யோ எப்பிடி இப்பிடில்லாம் எழுத முடியுது! அருமை! பூங்கொத்து!
ம்ம்ம்... நல்லாருக்கு.
நல்லா இருக்கு ராகவன் :)
அனுஜன்யா
கருப்புன்னா சாத்தான்
வெள்ளைன்ன தேவர்கள்
வெள்ளை வேஷ்டி தலைவன்
கட்டம் போட்ட லுங்கின்னா காட்டான்
இப்போ எல்லாமே தலை கீழாப் போச்சு.
//அனுஜன்யா said...
நல்லா இருக்கு ராகவன் :)
அனுஜன்யா
April 10, 2010 12:20 PM//
ஆஹா மோதிரக்கை !!!
ராகவன் இது ஒரு குறிப்பிடத்தகுந்த நகர்வு என்று நினைக்கிறேன் இது இந்தக் கவிதை. இதுல் இருக்கும் கச்சிதத்தன்மை ,மொழி,வெளிபாடு எல்லாம்
ராட்சதன் ஒருவன் சீனச் சுவரில் ஒரு காலும் மற்றொரு கால் எவெரெஸ்டிலும் பிறகு கைபர் கணவாயிலும் தாவிச் செல்லும் படி நிலைகள் பார்க்க கிடைக்கும் மொத்தமாக வாசிக்கக் கூடுபவர்க்கு
நெடுந்தூரப் பயணம் நெடுந்தூரப் பயணம் என்று முடியும் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில்மணி என்பது போல் துவங்கும் பாடல் அது
:)
//கடவுளுக்கு தன் கடைவாய் பற்களையும்
முட்டி துருத்திய கொம்புகளையும்
தன் வாலையும் கழற்றி கொடுத்தது
சாத்தானின் தலைக்கு மேல்
சுழன்றது ஒளிவட்டம்//
அன்பின் ராகவன்.
இந்தக்கவிதை,ஆரம்பித்து
சுரீர் என்று முடிகிறது.
அருமை
adada arumainga ragavan
நல்லா இருக்கு ராகவன்.
ரொம்ப பிடிச்சிருக்கு ராகவன்!
அப்பாக்களுடன் சண்டை இடுகிற பிள்ளைகள் போல, கடவுளுடன் ஏதோ ஒரு வகையில் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.. இந்தக் கவிதையும் அதன் வெளிப்பாடு.. இல்லையா.. ராகவன்? யாரிடம் முனகிக் கொள்கிறோமோ அவர்/அவன்/அவள் மடிதான் நம் ஆழ்மன எதிர்பார்ப்பு.. இது ஒரு வித சைகாலஜிகல் முரண்
உங்களை ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருக்கிறேன். இயன்ற போது எழுதவும்.
நன்றி,
தீபா
http://deepaneha.blogspot.com/2010/04/blog-post_09.html
நான் ரிஷபனுடன் உடன் படுகிறேன் .கடவுள் என்ற பிரயோகம் வரும் போது அதில் எல்லாம் அடங்கும் .சாத்தானின் வால் உட்பட .அவனிடம் இருந்து இவன் பெறுவது குழந்தைகளின் கண்ணாமூச்சி விளையாட்டு போல.சரி போகட்டும் சாத்தான் கொஞ்ச நேரம் கடவுளின் குணம் பெறட்டும். வித்யாசமான கரு .
this one z awesome!!
gr8 theme :)
ராகவன்,
கவிதை அருமையாக வந்திருக்கிறது.
வாழ்த்துகள்
0
நானும் கடவுளைப் பற்றி இரண்டு கவிதை எழுதினேன். அதில் ஒன்றுதான் ‘கடவுள் இறந்து விட்டார்‘ மற்றொன்று ‘சாத்தானின் தாஸ்யன்‘. கிட்டத்தட்ட இதே பொருளில் வருகிறது. ஆச்சரியம்தான்.
0
அன்பு நண்பர்கள் அனைவருக்கும்,
என் அன்பும், நன்றியும். தனித்தனியாக எழுத இயலாததற்கு வேலைப்பளுவும் காரணம்.
நேரம் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுதுகிறேன்.
அன்புடன்
ராகவன்
Post a Comment