Friday, April 23, 2010

அதை ஏன் கேக்குற...

நெடுகப்பந்தல் இட்டு

நெய்யூற்றி பொங்கல் வைத்து
குலவையும், குங்குமமும்
அப்பி கிடக்கும்
கோயில் திண்ணையில்
சுருண்டு உறங்கும்
நாய்க்கு பண்டிகை நாளெல்லாம்
பகல் தூக்கம் ஓடிவிடும்


அயர்ந்து உறங்கும்
நாயின் வாயில் வடியும்
எச்சிலில் மிஞ்சிய
எலும்பின் மஞ்சைகளை தேடும்
காக்கைகள்
முற்பகலின் நிழல்களாய் திரியும்
மற்ற நாட்களில்

பால் மாரு குலுங்க
பகட்டு புட்டம் ஆட்டி
வால் ஒடுக்கி ஒதுங்கி போகும்
கருப்பு கண்ணழகியை
கனவில் புணரும் நாய்
கால் உதைத்து முனகும்
பெருங்கனவின்
அழைப்பு மணி விடாது கேட்கும்

பின்னங்கால்கள் தரையில்
இழுக்க வயிற்றுப்பகுதியின்
அரிப்பை தேய்த்து
இடம்பெயர்க்கும் நாய்
மோப்பக்குழையும் நாளில்
குறி மறந்து தூங்கும்

சீமை நாயென்று
சேரவிடாத எஜமானரின்
வீம்பில்
விரைகள் குலுங்க ஓடும்
பொழுதுகளின் பற்களில்
சிக்கி நசுங்கும் நாய்களின்
கிரியைகளில்
நாரத்தங்காய் காய்த்து தொங்கும் 

8 comments:

AkashSankar said...

ரொம்ப உருகி எழுதிருக்கீங்க....

பத்மா said...

சிக்கி நசுங்கும் நாய்களின்
கிரியைகளில்
நாரத்தங்காய் காய்த்து தொங்கும்

இது ரொம்ப கொடுமை ராகவன் .அதற்காகவே அடித்து கொல்பவர்கள் உண்டு .
நாயின் பார்வையில் அப்பாவித்தனம் தெரியும் தெரியுமா?
உணர்ந்து எழுதிய கவிதை .

Vidhoosh said...

இன்னும் கொஞ்சம் எடிட் செஞ்சு போட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அருமையாக இருக்குங்க ராகவன்.

நார்த்தங்காய் மரத்துக்கு செத்து போய் விடுகிறது ஏதோ ஒரு நாய், அக்னி நட்சத்திரத்து தெரு நாயை விடவா அது பாவம்??

நேசமித்ரன் said...

//இன்னும் கொஞ்சம் எடிட் செஞ்சு போட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.//

வழி மொழிகிறேன்

ஆனால் நுண்ணிய பார்வையில் தானாகி பார்த்திருப்பது ராகவனுக்கு படி தாண்டல்

Anonymous said...

super reghavan. keep it up. kabilan Arunachalam

Anonymous said...

super reghavan. keep it up.

உயிரோடை said...

நல்ல கவிதை ராகவன்.

Ashok D said...

அருமையான கவிதை ராகவன்.
காலபைரவனை பற்றிய உங்கள் நுன்அவதானம் சிறப்பு.
நாயை நாயென்று சொல்ல கூச்சமாக இருக்கிறது.

இப்பொழுது நாயையும், நகரத்தில் வாழும் 30 வயதை தாண்டியும் திருமணமாகாத இளைஞர்களின் வாழ்வையும், ஒப்பிட்டுக்கொள்கிறேன். 30 வயது தாண்டியும் ஜாதகத்தாலும் வசதியின்மையினாலும் மணமாகாத பெண்களின் வாழ்வும் தோன்றிமறைகிறது.

ஆம் ஒரு ரணம் இன்னொரு ரணத்தை சீண்டிச்செல்கிறது. இரக்கமில்லாத வெய்யிலும் தன் பாட்டுக்கு கொடுரத்தை காட்டிச்செல்கிறது.