காற்றின் குரல்வளை
நெரிக்கப்பட்ட போது
பிளீரிட்ட தொனியில்
பூக்கள் நெருக்கி
வெடித்து திராவகம் துப்பியது
மேகங்கள்
உலர்ந்து உதிரதொடங்கியது
இலைகள் அடர்ந்த
மரங்களின் உதடுகள்
தைக்கப்பட்டது
கூடடைந்த பறவைகளின்
கூட்டிசை உறைந்து
வனசிற்பமாய் போனது
நதி நீரின் அலை வளையங்கள்
பதுக்கபட்டது அடியாழத்தில்
புதைத்து வைக்கப்பட்ட
ரகசிய குமிழ்களில்
மூச்சுக்காற்று நிரப்பிவைக்கப்பட்டுள்ளது
காகிதங்களின் சிறகுகள்
முறிக்கப்பட்டது
கவிதை பறக்காமல் கிடந்தது
பேப்பர் வெயிட் போல கனத்து
5 comments:
அடிக்கர வெயில்ல நீங்க வேற.. மழை வரும்ன்னு கவிதை எழுதுங்க...
பாருங்க நான் கவித எழுதறதனால தான் சென்னைல மழையே பெய்யுது.. நம்புங்க... :))
சவக்காற்று - வெக்கை
தலைப்பே மெரட்டுது ராகவன் .கடனுக்காக வீசும் காற்று ,உடலில் உரைக்காத காற்று சவக்காற்று தான் .
ரொம்ப கடுமையா தான் இருக்கு .
//கவிதை பறக்காமல் கிடந்தது//
என்ன ஒரு சிந்தனை ராகவன். அமிழ்ந்து போனேன். வாழ்த்துகள்
ஸ்தம்பிக்கிறது..
மரங்களின் உதடுகள்
தைக்கப்பட்டது
ஆம்.. அப்படித்தான் தோன்றுகிறது..
./ரகசிய குமிழ்களில்
மூச்சுக்காற்று நிரப்பிவைக்கப்பட்டுள்ளது/
அப்பாடா!மூச்சுமுட்டுகிறது.
Post a Comment