Tuesday, May 11, 2010

அச்சிறும்...

அடைத்து சாத்திய கதவுகளின்
இடுக்குகளில் கசிந்து உட்புகும்
மழை நீர்
விளக்கு வெளிச்சத்தை ஏந்தி பிடிக்கிறது
மேலே மிதக்கும் துடைக்காத
தரைத்தூசியை
சரிகையாய் சுற்றிக்கொண்டு
மினுக்கி நடக்கிறது
பட்டுப்பாவாடை அணிந்த சிறுமி மாதிரி
இறந்துகிடக்கும் எறும்புகளை
நட்சத்திரங்களாய் அணிந்து கொண்டு
மேலும் நடக்கிறது
மேட்டில் ஏறமுடியாமல் ஒரு இடத்தில்
குவிக்கிறது கொண்டு வந்தவைகளை
தேக்கியபடியே
அவசரமாய் செய்த கப்பல்
மிதக்கிறது என்னையும் என் மகளையும்
சுமந்து கொண்டு தூரதேசத்திற்கு

9 comments:

க ரா said...

ஆகா. ஆகா. பின்றீங்க ராகவன்.

Ashok D said...

அட்டகாசம்... அருமை...அழகு :)

ரொம்ப நல்லா வந்திருக்குங்க

பத்மா said...

ரொம்ப அழகா வந்துருக்கு ராகவன் .அந்த கசிந்த நீரோடு நாங்களும் பயணம் செய்கிறோம் .கண் முன்னே விரிகிறது அந்த கருப்பு நட்சத்திரங்களுடன் கூடிய நீர் பாவாடை .
கொன்னுடீங்க

ரிஷபன் said...

செம்புலப் பெயல் நீர் போல.. மழை நீர் புது வர்ணனையுடன் ஆஹா.. அற்புதமாய் வார்த்தைகள்.. சபாஷ்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அற்புதம் மிஸ்டர் ராகவன்!

Vidhoosh said...

//மேலே மிதக்கும் துடைக்காத
தரைத்தூசியை
சரிகையாய் //

ரொம்ப அழகு :-)

சோன்னு கொட்டுது மழை. வீட்டில் யாரும் இல்லையா? மழைக்கு எறும்பெல்லாம் சேத்து வச்சதெல்லாம் வேஸ்டு..... பாவம் .. எறும்பு தான் ஹீரோ இங்கயும்.

உயிரோடை said...

க‌விதை ரொம்ப‌ ந‌ல்லா இருக்கு ராக‌வ‌ன்

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு என்று பின்னூட்டம் இட கை நடுங்குகிறது ராகவன்...

ராகவன், என் ராகவன்

எங்கும் போய்விட வில்லை.

இங்குதான், இந்த கவிதையில்

இங்குதான், இந்த மழையில்

இங்குதான், இந்த படகில்

இங்குதான், இந்த மனசில்

இருக்கிறான், இங்குதான்.

ராகவன்,எங்கள் ராகவன்!

அம்பிகா said...

நேற்றே படித்து விட்டேன். பின்னூட்டம் இட நேரம் வாய்க்க வில்லை.
அருமையா இருக்கு ராகவன்.
பாரா அண்ணனின் பின்னூட்டத்துடன்
படிக்க சுவை கூடுகிறது.