Wednesday, May 12, 2010

மாற்று...

இன்று நல்ல நாளாய் இருக்கவேண்டும்
நீண்ட நாள் நிலுவையில் இருந்த
தீர்வைப்பணம் வழங்கப்பட்டது
பாக்கி வைத்திருந்தவர்களுக்கு
அரைப்பங்காவது கொடுக்க முடிந்தது
இருளோ என்றிருந்த வீட்டிற்கு
மறுபடி மின் இணைப்பு கிடைத்தது
கேபிள் இல்லாம கஷ்டமா இருந்தது
தொடர் நாயகிகளின் சோகபிம்பங்களில்
தேறுதல் அடைய முடிந்தது
அவளுக்கு ஒரு புடைவையும்
ரவிக்கையும் உள்பாவாடையும்
வாங்க முடிந்தது
கல்யாணம் செய்துகொள்ளப்போகும்
தம்பியின் செலவுக்கு கொஞ்சம்
எடுத்து வைக்க ஆனது 
பயணச்செலவுக்கு
மிஞ்சியதை எடுத்து கொள்ள முடிந்தது
அப்பா! ஒரு செயின் வாங்கி கொடுப்பா!
தாலி செயின் மட்டும் போட கஷ்டமா இருக்கு
என்றவளின் மினுக்கட்டான்களில்
உருகியதை மீண்டும்
வாரி கூட்ட முடிவதில்லை ஒருபோதும்

10 comments:

பா.ராஜாராம் said...

இப்பதான் பழைய கவிதைக்கு பின்னூட்டம் போட்டு நிமிர்ந்தால், ரீடிங் லிஸ்ட்டில் புது கவிதை!

யோவ்...அப்பா,

ரெண்டு நாளுக்கு ஒரு கவிதை மாற்றும். எல்லோரும் வாசிக்க வேணாமா?

யோவ்...அப்பா,

எனக்கொரு கடல் வாங்கி தாரும்.

யோவ்...அப்பா,

எனக்கொரு வானம் வாங்கி தாரும்.

யோவ்...அப்பா,

எனக்கொரு யோவ் வாங்கி தாரும்.

எப்பவும் தீராத யோவ்!.. :-)


fantastic!

Vidhoosh said...

அய்யோவ்...அப்பா..

VELU.G said...

அருமையான கவிதை

ரிஷபன் said...

இன்று நல்ல நாளாய் இருக்க வேண்டும்..
ரசனைக்கு!

க ரா said...

நன்றி ராகவன் . அழகு கவிதைக்கு.

நேசமித்ரன் said...

அவர்களின் வேண்டும்கள் தானே நம்மை செலுத்திக் கொண்டிருக்கின்றன ராகவன்
:)

மதுரை சரவணன் said...

i agree with nesa mithran.

அம்பிகா said...

நேசமித்ரன் said...
அவர்களின் வேண்டும்கள் தானே நம்மை செலுத்திக் கொண்டிருக்கின்றன ராகவன்
:)

கவிதை நல்லாயிருக்கு ராகவன்.

காமராஜ் said...

ராகவன்.இந்தக்கவிதை ஒரு இயல்பான சோகத்தை அலட்டல் இல்லாமல் சொல்லிமுடிக்கிறது.
நேசனின் பின்னூட்டம் போல. அழகு ராகவன்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை