Thursday, May 13, 2010

உறவிலி யாக்கை...

மொழி இடரும் போது
அங்க அசைவுகளில்
சொல்லி முடிக்கிறேன்
உனக்கான ஒலிகுறிப்புகளை
மேலும் கிழுமாய்
எழுதிக்கொண்டே இருக்கிறேன்
செவ்வக காகிதத்தில்
நமக்கான இசை செறிவுகள்
கலைத்த செப்புகளை போல
கிடக்கிறது
வார்த்தைகள் உறங்கும்
பேழைக்குள் துளை ஏற்பட்டு
ஒழுகி வடிகிறது
அர்த்தங்கள் தொலைத்த
விசும்பல்கள்
எழுதாப்பக்கங்களின் வெறுமையில்
சுடுமணலின் தகிப்பு
ஏதோ உணர்த்த முற்படுகிறது
புரியாமல் தூரவைத்து
வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்
சடசடவென்று பற்றி
எரிகிறது காகிதம்
இருமுனைகளில் ஒதுங்கும்
உனக்கும் எனக்கும்
எரிந்து கொண்டு இருக்கிற நமக்கும்
வேறுபாடு என்று
எதுவும் இருக்கவில்லை

11 comments:

பா.ராஜாராம் said...

excelent ragavan!

க ரா said...

அருமை ராகவன்.

மதுரை சரவணன் said...

//சடசடவென்று பற்றி
எரிகிறது காகிதம்
இருமுனைகளில் ஒதுங்கும்
உனக்கும் எனக்கும்
எரிந்து கொண்டு இருக்கிற நமக்கும்
வேறுபாடு என்று
எதுவும் இருக்கவில்லை //
மிகவும் அருமை . வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

ராகவன்

வண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கும் நீரூற்றைப் போல் மொழி மாற்றி எழுதும் வரிகள் கொண்ட கவிதைகள் இப்போதெல்லாம்

ம்ம் :)

காமராஜ் said...

ராகவன் களைந்து கிடக்கும் செப்புகள் அருமையான நினைவூட்டல்

உயிரோடை said...

குறீயீட்டு க‌விதைக‌ள் பெரும்பாலும் அத்த‌னை நுணுக்க‌மாக‌ எழுத‌ப‌டுவ‌தில்லை. ஒலி குறிப்புக‌ளை கொண்டு ஒரு மொழி குறிப்பை த‌ந்து க‌வித்திருக்கிறீர்க‌ள் ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கின்ற‌து. வாழ்த்துக‌ள்

த‌லைப்பே அருமையாக‌ இருக்கின்ற‌து

Ashok D said...

படிக்க அழகாய் உள்ளது.

மணிஜி said...

நல்லாயிருக்கு..வழக்கம் போலவே

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமை . வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

வார்த்தைகள் வசப்பட்ட நிலை!

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,

பா.ராஜாராம்,
இராமசாமி கண்ணன்,
மதுரை சரவணன்,
நேசமித்ரன்,
காமராஜ்,
லாவண்யா,
அசோக்,
தண்டோரா,
சே.குமார்,
ரிஷபன்,

எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும். தொடர்ந்து வந்து என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் என் வந்தனங்கள் என்னும் பொன்முடிச்சு.

அன்புடன்
ராகவன்