Thursday, December 23, 2010

விவாகரத்து...

பிரிவாணையின் நிரந்தரம் பற்றிய
கேள்விகள் பாதரசக்குறிகள்
இழுவிய மையின் துளி கலைத்த சித்திரமென 
பரவும் தாள்களில் காற்புள்ளிகள் இல்லை
அச்சடிக்கபட்டிருக்கும் எழுத்துக்கள்
உறவைப் பற்றிய கதைகளை கிசுகிசுக்கவில்லை
கனத்த வெற்றிடங்கள் வளர்ந்து அழுத்த
விரித்த கால்கள் பழுதென நிற்க ஒடியும்
மௌனங்கள் சல்லடையாய் துளைக்கும்
பெருமூச்சில் பற்றி எரியும் ஏகாந்தவெளி
படர்ந்து கருகும் சுள்ளிகள் முளைத்த மரக்காடு
வசந்தத்தின் அறுந்த குரல்வளைகளில்
பிளிறி அலறும் வேதனைப் பெருவோலம்
அசையாத இறுகிய உதடுகளில் உலர்ந்த ஈரம்
குறுநகையில் ரணமாய்க் கிழிக்கும் உடைந்த
கண்ணாடிச்சில்லுகள்
இழுத்துப் பற்றிய சிறுவிரல்களின்
தயங்கி விலக்கிக்கொள்ளும் கணங்களின்
பொருந்தா முனுமுனுப்பில் பிசுபிசுத்த வியர்வை
கண்ணீராய் பெருகி நணைக்க
பற்றிக்கொள்ள கொம்பின்றி அடித்துச் செல்லும்

9 comments:

roshaniee said...

/அச்சடிக்கபட்டிருக்கும் எழுத்துக்கள்
உறவைப் பற்றிய கதைகளை கிசுகிசுக்கவில்லை//
மனதை கனக்க வைத்த வரிகள்
அருமை பதிவு

sakthi said...

மையின் துளி கலைத்த சித்திரமென
பரவும்

அபாரமான உவமை

sakthi said...

ஒடியும் மௌனங்கள் சல்லடையாய் துளைக்கும்

யப்பா

sakthi said...

மனம் நெகிழ வைத்த கவிதை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இணையும் உறவில் உள்ள ஆனந்தத்தை விட உறவைப்
பிரியும் துயரம் ஆணி கொண்டு கீறுவதாய் மனதில் ரணம். இத்துயர் கவிதையின் வடிவு குறித்தும் மொழி குறித்தும் பேச விடாது என்னை அடித்துச் சென்றுவிட்டது.உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறேன் ராகவன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அனுமதி உண்டென இது.
என் தளத்தில் இக்கவிதை சில நாட்களுக்கு இருக்கட்டுமே ராகவன்.

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

ஆஹா என் பாக்கியம் அல்லவா இது! அப்படியே... சுந்தர்ஜி...


அன்புடன்
ராகவன்

'பரிவை' சே.குமார் said...

Wow... Super Kavithai.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு ராகவன்! :-)

நிறைய வாசிக்க இருக்கு. இந்த சுவையோடு போய்ட்டு பொறவு வரணும். விசாலம் காஃபி சாப்பிட்ட நாக்கு!