உங்களை கடந்து போகும்
பழைய புத்தகங்கள் விற்கும் சிறுவனும்
நாக்கில் அலகு குத்தி அம்மனின் படத்தை
கழுத்தில் மாட்டிக்கொண்டு உங்களிடம் சில்லரைக்காய்
கை நீட்டும் சிறுமியும்,
இஞ்சி மரப்ப, வேர்க்கடலை விற்கும் பெரியவரின் முகமும்
பூக்கூடையுடன், உங்களுக்கு அருகில் இருக்கும் பெண்மணிக்காய்
பூ வாங்க இறைஞ்சும் குரலும் உங்களை சலனிக்கவில்லை
இசையையும் குரலையும் பிரிக்காது
வந்து விழும் பாடலுக்கும் நீங்க செவி சாய்க்கவில்லை
எங்கோ வெறித்தபடி இருக்கிறீர்கள்
இந்த பயணத்துக்கான காரணம் ஏதோ இருப்பது போல இருக்கிறது
உங்களைத் தாண்டி உள்ளங்கை நீட்டும்
பார்வையற்றவரின் குரலில்
உங்கள் அருகில் இருக்கும் பெண்மணி
திரும்பி, உங்கள் பையை துளாவி சில்லறையை எடுத்துப் போடுகிறார்
அவரைப் பார்த்து முறைக்கிறீர்கள்
அவர் வெடுக்கென திரும்பி கொள்கிறார்
திரும்பவும் எங்கோ வெறிக்கும் உங்கள் கண்ணில் நான் விழுகிறேன்
வெட்கமாய் போய் விடுகிறது உங்களுக்கு
உங்கள் அருகில் இருக்கும் பெண்மணியை
ஏதோ காரணம் சொல்லி இருக்கை மாற்றச்சொல்லி
ஜன்னலுக்குள் புதைகிறீர்கள் இப்போது.
பேருந்து கிளம்புகிறது பயணம் ஆரம்பித்துவிட்டதாய்
உற்சாகம் வருகிறது உங்களுக்கு சேருமிடம் பற்றிய சித்திரங்களை
ஜன்னல் திரையில் வரைய முயல்கிறீர்கள்
நான் உங்கள் முன்னால் ஜன்னல் கம்பியில் சாய்ந்து உறங்குபவரை அல்லது உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணியை பார்க்க தொடங்குகிறேன்
எச்சில் வழிய உறங்கப்போகும் உங்களை நான் இனி கவனிக்கப்போவதில்லை என்று நிம்மதியடைகிறீர்கள்
14 comments:
Anna Wishes for the book release.. I know that through madhu sir...
கவிதை நல்லா இருக்கு
அன்பு ராம்,
இது கவிதைண்ணு ஒத்துக்கிட்டதுக்கு அன்பும் நன்றியும்...
உன் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்...
மாதவராஜின் உதவி அளப்பரியது... ராம். அது ஜென்மக்கடன்...
அன்புடன்
ராகவன்
இப்பலாம் முன்ன மாதிரி அதிகமா எழுதறது இல்லையே ஏண்ணா ?
முடிஞ்சா நேரம் கிடைகரப்ப என்னோட வலைபக்கத்துக்கு வாங்கண்ணா
சில கரைசல்களின் அடியில் படிந்திருக்கும் சாரம் (அ) திப்பி போல வாசித்து முடித்ததும் ஏதோ ஒட்டிக் கொணடது மனசில்.
புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ராகவன் !
தினம் தினம் கடந்தும் கடக்கமுடியாமல் தவிக்கும் தவிப்பை ஒரு ஓவியமாய் வரைந்துவிட்டீர்கள் ராகவன்.ஒரு கவிதையை விதைத்துவிட்டு இனி எச்சில் வழிய உறங்கப்போகும் அவருக்குக் கவலை இல்லைதான்.
நிதர்சனம்.. அருமையான கவிதை...
unmai...
கதையாக எழுத வேண்டிய விசயம். நன்று. என்ன புத்தகம் எப்போது வருக்கின்றது யார் வெளியீடு. மடலிடுங்கள்
அன்பின் ராகவன்.
வணக்கம்.முதலில் தொகுப்பு வெளிவர வாழ்த்துக்கள்.என்னால் கணினி முன்னாடி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் மட்டுமே உட்காரமுடிகிறது.ஏற்கனவே சோம்பேறிவேற் ஆதாலல் மட்டுமே உங்களுக்கு உங்கள் கதைகளை மொத்தமாகப்படிக்கமுடியவில்லை.
மாது சரியான தேர்வு,அவனுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.வெளியீடு எப்போ எந்த பதிப்பகம்?? வேணும் அன்பு.
அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,
மாதவராஜ் தான் தன் தோளில் ஏற்றி சுமக்கிறார் என்னை.
வம்சி... வெளியீடு... சிறுகதைகளின் தொகுப்பு... வண்ணதாசனின் முன்னுரையோடு...
அன்புடன்
ராகவன்
Post a Comment