Tuesday, December 22, 2009

ஒரு கடவுளும் இரண்டு காலி மதுக்கோப்பைகளும்...

இரண்டு
காலி மதுகோப்பைகளாய்
நீயும் நானும்
அந்த அணிவறையில்.

இட்டு நிரப்புவார்கள்
யாராவது
என்று காத்திருக்கிறோம்
எனக்கு பொறுமை
குறைந்து கொண்டே
வருகிறது
யாரையும் காணோம்

வெறுமையில் நிரம்பி
வழிகிறேன் நான்
நீ இன்னும்
அரவமற்ற பொழுதுகளை
எண்ணி கொண்டிருக்கிறாய்
உன் காத்திருப்பு
எனக்கு அசதியாய் இருக்கிறது
வழிந்த வெறுமையில்
நிறைகிறது அந்த அணிவறை

யாரோ வருவது
போல் இருக்கிறது
வந்தவர் தலையில்
ஏதோ வட்டமாய்
சுழல்கிறது
நான்கு கரங்களுடைய
அவர்
உன்னையும் என்னையும்
எதையோ ஊற்றி நிரப்புகிறார்
கணம் தாங்காமல்
நான் விரிசல் விடுகிறேன்
உன்னை கையில் ஏந்தி
குடித்து விட்டு
என்னையும் கையில்
எடுக்கிறார்
விரிசல் கையை கிழிக்க
உதறி விட்டு
ஓடுகிறார் உதிரம் வடிய...

5 comments:

பா.ராஜாராம் said...

oops!

அருமை ராகவன்!

காமராஜ் said...

கவிதை அருமை ராகவன்.

க.பாலாசி said...

அருமையான கவிதை, இயல்பான வரிகள் அசத்தல்...

கருவை பாலாஜி said...

உஙகள் கற்பனை அபாரம்

உயிரோடை said...

திர‌வ‌ம் ஊற்றி விரிச‌ல் வ‌ருமா?