Wednesday, December 23, 2009

பிரிக்கபடாத கடிதம்...

உள்ளங்கையில் மசி
படர்த்தி
உன் இருப்பை
காட்டி
மீள்கிறது
நிலைக்கண்ணாடி
மேசையில்
கிடக்கும்
அந்த கடிதம்

சுழன்றடிக்கும்
மாயக்காற்று
தார்சாலில்
நீ சொருகிய
ஒலைக்காற்றடியின்
நுரையீரல்
சுவர்களை
முட்டித்
திறக்கிறது
சரிகிறது
மூச்சு முட்டிய
விளையாட்டு
பொழுதுகள்

உதட்டு
மடிப்புகளுக்குள்
உறங்கி
மறைந்திருக்கும்
முத்தங்களில்
இன்னும்
மிச்சமிருக்கிறது
களவு,
பிளவில்
பெருகுகிறது
ஒரு ப்ரிய
ஊற்றுக்கண்

உதிர்ந்து
விழும்
புகைகூண்டு
சுவர்கள்
நாம்
ஒதுங்கிய
நிழலை
உதறி எடுத்தது
சிதறி விழுந்தோம்
தனி
தனியாக..

நடுங்கும்
என் விரல்
ரேகைகளை
கடிதத்தில்
பதிக்க அஞ்சுகிறேன்
உன் உதட்டு
ரேகைகளில்
இடறி விழ
அவசியம் இல்லாமல்
கடிதம் இன்னும்
பிரிக்கப்படாமலே.....




 

6 comments:

கருவை பாலாஜி said...

சிங்கம் களத்தில் இறங்கிருச்சா..

கருவை பாலாஜி said...

சிங்கம் களத்தில் இறங்கிருச்சா..

மண்குதிரை said...

nice sir

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நல்லாருக்கு பாஸ்

Priya said...

simply superb!

காமராஜ் said...

//உதட்டு
மடிப்புகளுக்குள்
உறங்கி
மறைந்திருக்கும்
முத்தங்களில்
இன்னும்
மிச்சமிருக்கிறது
களவு,
பிளவில்
பெருகுகிறது
ஒரு ப்ரிய
ஊற்றுக்கண்//

அருமையான சொல்லாடல் அந்த கதகதப்பை அப்படியே அள்ளிக்கொடுக்கிறது கவிதை.