Wednesday, January 13, 2010

நம்பிக்கை...

மூணு குடம்
ரெட்டப்பிள்ளையாருக்கு
தண்ணி ஊத்தி
கும்பிட்டு போனா
பரீட்சையில
பாசாகிடலாம்

செம்பருத்தி பறிச்சு
வச்சு
வெண்ணை சாத்தி
செந்தூரம் இட்டுகிட்டா
அனுமாரும்
துணைக்கு இருப்பாரு

ஆத்தாவும் அது
பங்குக்கு
மாரியாத்தாளுக்கு
பொங்கல் வைக்க
நேந்துகிச்சு
எம்மவ
பாசாகிடனும்னு

பரீச்சை நாளும்
வந்துடுச்சு
படிச்சதெல்லாம்
மறந்து போச்சு
துண்ணூறு, குங்குமம்
செந்தூரம்
நெத்தில ஒட்டிக்கிடக்க
கும்பிட்ட சாமியெல்லாம்
குத்த வச்சு
கூட இருக்க
நினைப்பூட்டி
தர யாரும் இல்ல

எழுதி முடிச்ச பரீச்ச
எப்பவும் போல
திருப்தி இல்லை
இப்பவும்

ஒட்டுப்புல் எடுத்து
பாசா பெயிலா பார்க்க
ஒட்டிக்கிச்சு புல்லு
நிம்மதியா
இருக்குது இப்போ...

9 comments:

S.A. நவாஸுதீன் said...

////ஒட்டுப்புல் எடுத்து
பாசா பெயிலா பார்க்க
ஒட்டிக்கிச்சு புல்லு
நிம்மதியா
இருக்குது இப்போ...////

ஹா ஹா ஹா

காலைலேர்ந்து என்னமோ ஒரு மாதிரியா இருக்கமா ஃபீல் பண்ணினேன். படிச்சு முடிச்சதும் மனசு லேசான மாதிரி இருக்கு ராகவன்.

passerby said...

கொத்தமங்கலம் சுப்பு ஞாபகம் வருதே..!

Gowripriya said...

:)))

அன்புடன் நான் said...

நம்பிக்கை நல்லாயிருக்கு....

உங்களுக்கு
பொங்கல் வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

nice one

அம்பிகா said...

நம்பிக்கைகள்,
நல்லாவே இருக்கு ராகவன்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

மதுர வாசம்...!

காமராஜ் said...

வழிவழியாக வந்த இந்த பள்ளிக்கூட நம்பிக்கைகள்.புத்தக இடுக்கில் கணவுகாணும் மயிலிறகாக தொடர்கிறது.

பா.ராஜாராம் said...

நவாஸ் இந்த கவிதையை அழகாய் கொஞ்சி இருக்கிறார்.அதற்க்கு மேலா நான் கொஞ்சி விட போகிறேன் ராகவன்?