Sunday, January 24, 2010

கட்டுக்கதைகளில் உறையும் கடவுள்

கடவுளின்
உதடுகளில் யாரையும்
முத்தமிட்டதற்க்கான
அடையாளங்கள் இல்லை

அவர் உள்ளங்கை ரேகைகளில்
பிற ரேகைகளின் கலவியும்
காண முடியவில்லை

உடலின் கொதி நிலையும்
ஒரே நிலையில் தான் இருக்கிறது
பிறரின் உடல் வெப்பம்
ஏற்படுத்திய வெடிப்புகள்
ஏதுமில்லை 

அவரின் மெலிந்து
தேய்ந்த அவயங்களில்
ரகசியங்கள் பொதிந்து இருக்கின்றன
இன்னும் புரட்டாத
பாறைக்கடி நிலம் போல

ஆனாலும்
முத்தமிட்ட, பிணைந்த,
புணர்ந்த
கட்டுக்கதைகள்
தக்கைகளாய் மிதக்கின்றன

தூர் வாராத கிணறுகளில்...

5 comments:

S.A. நவாஸுதீன் said...

///பிறரின் உடல் வெப்பம்
ஏற்படுத்திய வெடிப்புகள்///

///ரகசியங்கள் பொதிந்து இருக்கின்றன
இன்னும் புரட்டாத
பாறைக்கடி நிலம் போல///

///தக்கைகளாய் மிதக்கின்றன

தூர் வாராத கிணறுகளில்...///

ரொம்ப ரசிச்சேன் மக்கா.

பா.ராஜாராம் said...

அப்பா..

இதையா ஏதோ கிறுக்கி இருக்கேன் என்று சொன்னீர்கள்?

அபாரம் ராகவன்!

தொடர்ந்து கிறுக்கவும்.

:-)

மனங்கொத்தியில் உள்ள கவிதை அருமை.

மாதவராஜ் said...

நன்றாக வந்திருக்கு.

வரிகள் வெதுவெதுவென இருக்கின்றன.

ரிஷபன் said...

பாவம் கடவுள்.. கட்டுக் கதைகளால் அவரையும் நிராகரித்துவிட்டார்கள்.. நம்மவர்கள்.. தெருவில் பாருங்கள்.. எத்தனை கடவுளர்கள்.. நிஜத்திற்கும் அன்பிற்கும் ஏங்கித் தவிப்பதை..

Deepa said...

:-) மிகவும் பிடித்திருக்கிறது இந்தக் கவிதை.