Sunday, March 21, 2010

அப்பா...

மெலிந்த தேகமென
கிடக்கிறது
அப்பாவின்
குற்றால ஈரிழைத்துண்டு

இப்போது யாரும்
உபயோகிப்பது இல்லை

பூத்துவாலைகள்
ஒத்தி ஒத்தி எடுக்கும்
நீர்த்துளிகள் மரித்து
தோல் ஈரமின்றி வரளும்

ஈரம் விட்டுச் செல்லும்
குற்றால துண்டு
அப்பாவை போல கிடக்கிறது
கரித்துணியாகும்
கொடுங்கனவுகளில்

16 comments:

ரிஷபன் said...

ஈரிழைத்துண்டு எனக்கு என் அம்மாவின் நினவுகளைக் கிளப்பி விட்டது..
கரித்துணியாகும் கொடுங்கனவுகளில்..
வரி சுள்ளென்று அறைகிறது..

பத்மா said...

கொடுங்கனவு கொல்கிறது இவ்வார்த்தை

dheva said...

இது தாங்க எதார்த்த கவிதை.....சூப்பர் Boss கலக்கீட்டிங்க...! ரொம்ப நல்லா இருக்கு....!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு ராகவன்.

ஆடுமாடு said...

நல்லாருக்கு ராகவன்.
வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

வரளும் ?

நல்லாருக்கு ராகவன்.

க ரா said...

ரொம்ப நல்லாஇருக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கொடுங்கனவு!! அடேங்கப்பா..!!
என்ன ஒரு வார்த்தை இது?

பாலா said...

பூத்துவாலைகள்
ஒத்தி ஒத்தி எடுக்கும்
நீர்த்துளிகள் மரித்து
தோல் ஈரமின்றி வரளும்

ஈரம் விட்டுச் செல்லும்
குற்றால துண்டு
அப்பாவை போல கிடக்கிறது
கரித்துணியாகும்
கொடுங்கனவுகளில்


சொரேர் னு அடிவயிர இழுக்குற மாதிரி இருக்குன் ராகவன்

உயிரோடை said...

//ஈரம் விட்டுச் செல்லும்
குற்றால துண்டு
அப்பாவை போல கிடக்கிறது
கரித்துணியாகும்
கொடுங்கனவுகளில்//

வ‌லியுண‌ர்த்தும் வ‌ரிக‌ள்

அன்புடன் மலிக்கா said...

//ஈரம் விட்டுச் செல்லும்
குற்றால துண்டு
அப்பாவை போல கிடக்கிறது
கரித்துணியாகும்
கொடுங்கனவுகளில் //

வரிகள் சுடுகிறது..

மிக அருமை..

Thenammai Lakshmanan said...

அருமை ராகவன்

காமராஜ் said...

ராகவன்...

குற்றாலத்துண்டு அப்பாக்களின் உவமையாவதும்
அப்பாக்களின் நினைவுகளாவதும் அழகு.
பிசைகின்ற கவிதை.

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,

அனைவருக்கும் அன்பும், நன்றியும்...

தனித்தனியாக எழுத ஆசைப்படுகிறேன் வழக்கம்போல...

ப்ரியங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறது, அடிமுடி தெரியாமல்...

மேலும் நன்றிகள் எல்லோருக்கும்,

அன்புடன்
ராகவன்

குட்டிப்பையா|Kutipaiya said...

//அப்பாவை போல கிடக்கிறது
கரித்துணியாகும்
கொடுங்கனவுகளில்//
வலிக்குது ராகவன்
அப்பாவின் நினைவுகள் பின்ன..

முனியாண்டி பெ. said...

கடைசி வரிகள் கன்னத்தில் அறைகிறது.

if you time just read my blog

http://adisuvadu.blogspot.com/2010/07/1.html