Friday, March 19, 2010

வாழ்தலறம்...

யாருமற்ற ஒரு
பெருவெளியில்
மிதந்து செல்கிறது
ஒரு ஒற்றை இறகு

கூட்டமாய் பறக்கும் பறவைகள்
தங்கள் சிறகுகளை சரிபார்த்து
தனதில்லை என விட்டு செல்கிறது
அந்த மெல்லிய இறகை

காற்றில் ஏறியும் இறங்கியும்
தயங்கி தயங்கி
மரக்கிளையில் சிக்குகிறது
அந்த இறகு

தன் அலகில் கவ்விய அந்த
பெயரறியா இறகை
குஞ்சுகளின் படுக்கையில்
மெத்தென இட்டது
அம்மா பறவை

அந்த இறகும்
இங்கு இருந்து தான்
தொலைந்திருப்போம்
என்று நம்ப தொடங்கியது
இப்போது

13 comments:

Balakumar Vijayaraman said...

சில்லிட வைக்கிறது, அற்புதம்.

ஆடுமாடு said...

Good one. (font probs)

//ஒரு அம்மா பறவை//


அம்மா பறவை. ippadi irukkalame.

நேசமித்ரன் said...

:)

காமராஜ் said...

இனி ஒற்றை இறகுகள் பார்க்கும்போதெல்லாம் உங்கள் கவிதை
வந்துதான் குறுக்கே படுக்கும்.அந்த ஒற்றை இறகின் மேல் நான் வைத்திருந்த பாசம் ராகவனாய்த்தெரியும்.
அழகு அழகு ராகவன். ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் ஆகிறது. உங்கள் கவிதையும்.

பா.ராஜாராம் said...

//அந்த இறகும்
இங்கு இருந்து தான்
தொலைந்திருப்போம்
என்று நம்ப தொடங்கியது
இப்போது//

என்ன அருமையான லேன்டிங்!

நமக்கும் கூட ஒரு ஆசுவாசம் வருகிறது ராகவன்!

நெருங்கிய நண்பன் விரும்பிய பெண்ணை மணந்தது போல்.அதற்க்கு நாமும் உதவியது போல்...

பத்மா said...

பல முறை இப்படி ஒற்றை சிறகாய் நாம் அலையும் நேரம் நம்முடையது என்று எண்ணும் தாயின் மனம் தட்டுப்படாதா என் ஏங்க வைக்கிறது இந்த கவிதை .

ரிஷபன் said...

என்ன ஒரு அழகு சொட்டும் கவிதை..

Thenammai Lakshmanan said...

மிக் அழகான கவிதை ராகவன்

அம்பிகா said...

//அந்த இறகும்
இங்கு இருந்து தான்
தொலைந்திருப்போம்
என்று நம்ப தொடங்கியது
இப்போது//

என்ன அழகான கற்பனை.

Matangi Mawley said...

arumai!

சுந்தர்ஜி said...

இறகு போன்ற சொற்கள் மிதக்க வைக்கிறது மனதை. மெல்லிய கவிதையின் சுகந்தம் பரவுகிறது வெளியெங்கும். அற்புதம் ராகவன்.

ராகவன் said...

anbu nanbarkal ellorukkum,

en anbum nandriyum eppodhum... officela tamil font problem...

aadumaadu sonnadhu pola oru amma paravaiyai, amma paravaiyaai maatri vitten, atharkku nandrikal pala avarukku...

melum ennai valuvaakkum en priya nanbarkal ellorukkum en vandhanangalum, anbum.

thanithaniyaaga ezhudha mudiyavillai...

mudhal muraiyaai en blogirkku vandhirukkum ellorukkum en thanipriyangal.

anbudan
ragavan

உயிரோடை said...

க‌விதை அழ‌கு. பாரா அண்ணாவின் வ‌ரிக‌ள் அதிலும் அழ‌கு.