ஒரு அந்தி,
இரண்டு புறாக்கள்.
ஒன்றை மற்றொன்று
துரத்தி மாடியின்
கைப்பிடி சுவரில் நகர்ந்து கொண்டே
கூழாங்கற்களை உருட்டுகிறது குரலில்
பெட்டை தன் பின் கொசுவ
இறகுகளை விரித்து கொண்டே
முன் செல்கிறது
பின்னால் செல்வது
ஆண் புறாவாய் இருக்கக் கூடும்
ஒரு வினோத சப்தம் எழுப்பி
தண்ணீர் தொட்டியின் அடியில் செல்கிறது
பறக்க எத்தனிக்கவில்லை
முகிழ்ச்சியும் நிகழ்ந்தபாடில்லை
விழிகளை உருட்டி உருட்டி
சுற்றுமுற்றும் பார்க்கிறது
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கலவியோ கவிதையோ
வாய்க்க பெறுவது என்னவென்று தெரியாமல்
12 comments:
கவிதை நல்லா இருக்குங்க.
//பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கலவியோ கவிதையோ
வாய்க்க பெறுவது என்னவென்று தெரியாமல்//
nalla parvai. hello its purely sex . hello i said ur poem.
கவிதையும் வாய்த்து விட்டது போல .
தலைப்பும் கவிதை போலவே அழகு
அந்தியே ஒரு அழகு கவிதைதானே ராகவன்! அந்த நேரத்தில் எல்லாமே கவிதையின் மயக்கமாகவே இருக்கும் இல்லையா?
//விழிகளை உருட்டி உருட்டி
சுற்றுமுற்றும் பார்க்கிறது
பார்த்துக் கொண்டிருக்கிறேன் //
பறவை உருட்டி உருட்டி பார்த்தது.உங்களுக்கு மட்டும் வெறும் பார்வையா? :-)))))))
ராகவன்.
அருமையான வரிகள்.
கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.
உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.
தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.
வாழ்த்துக்கள்.
நல்லாருக்கு ராகவன். :-)
/பின் கொசுவ இறகுகள்/
அற்புத உவமை
கவிதை வாய்த்துவிட்டது!
அது கூழாங்கல்லை உருட்டுகிற சத்தமில்லை.உற்றுக்கவனியுங்கள்.
கூழாங்கல் உருளும் போது ஓசை வரும்,ஆனால் புறாக்கள் குதுகுதுக்கும்
போது. எனக்கென்னவோ நல்லநேரம் படத்தில் டிக்டிக் அது மனதுக்கு தாளம்
பாட்டும்.இளையராஜாவிம்ஞ் இசைச்சேர்க்கை இல்லாத முனகலும் தான் ஞாபகத்துக்கு வரும்.
கொஞ்சம் பயத்தோடே.
nanraaga irukkirathu nanba
anbudan
ursularagav
அட!
//பின் கொசுவ இறகுகள்//
!!
:)
Post a Comment