பெயரில்லாமல்
முகப்பு இல்லாத சந்து ஒன்று
யாரும் தராது
தானேத் தேடி புசிக்கும்
நாய் போல
மெலிந்து கிடந்தது
யாரும் அடையாளப்படுத்தாமல்
தெரிந்து கொள்ளமுடியாது
நீண்டு நெளிந்து செல்லும்
அதன் தன்மையில்
எங்கிருந்தோ
ஆரம்பித்து
எங்கோ
கொண்டு செல்லும்
நோக்கம் இருந்தது
அல்லது
பெருவழியில் கலக்கும் அது
பயணங்களை நீட்டுவிக்கும்
குணத்தை கொண்டிருந்தது
மிதித்து கடந்த பாதங்கள்
உடைக்க உடைக்க
குமிழ்கள் திறந்து
பெருகி வழியும் சீழில்
எல்லோரும் கழித்துச்
சென்ற புண்களின் வீச்சம்
5 comments:
என்ன ஆச்சு.. வீச்சமாதான் இருக்கு..
அருமையா இருக்கு.
வீச்சமெடுக்கிறதுதான்.. ஆனாலும் அருமையாயிருக்கு.
நல்லக் கவிதை... தொடருங்கள்
கவிதை நன்று
Post a Comment