Tuesday, August 18, 2009

அப்பாவின் வீடு


எத்தனை வீடு
மாறினாலும்
அப்பாவிற்கு சாத்தியமாகிறது
அவருடைய
அடையாளங்களை இட்டு நிரப்ப...

மிகத்தோதாய்
வாய்க்கிறது வாகாய்
ஒரு படிக்கட்டு
சவரம் செய்து கொள்ள..

குற்றால ஈரிழைத்துண்டும்
எட்டுமுழ வேட்டியும்
உலர்த்த
எப்போதும் இருக்கிறது கொடிகள்..

ஏதாவது
ஒரு சந்தில் கிடைத்து விடுகிறது
ஒற்றைக் கிரனமாகவேனும்
சூரிய நமஸ்காரம்...

சுருள் பாக்கு, வெற்றிலையும்
பட்டணம் பொடியும்
யாராவது விற்கிறார்கள்
இவருக்கென்று...

எப்போதும்
அமைந்து விடுகிறது
பிற்பகலில்
கால் நீட்டி அயர, கதைபேச

ஒற்றைச்சுவர் நிழலும்,
சுற்றமும், நட்பும்...

அப்பா
மாற்றி வைத்த மாறி விட்ட
பொருட்களில்
இப்போதும்

சிரிக்கிறார்
எடுக்காமல் விட்ட நூலாம்படையிலும்....


..

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்று!

-ப்ரியமுடன்
சேரல்