அப்பத்தா வைக்கும்
கம்மா கெழுத்தி மீன்
மண் சட்டி குழம்பில்
கம்மாய் வாசனை
மிச்சமிருக்கும்
மணக்க மணக்க
உறிஞ்சி குடித்தவர்கள்
ஆத்தா, அப்பத்தா, அம்மா, அய்த்தை
வைத்தது போல வருமா
என்று மூளையின்
அடுக்குகளுக்குள்
தேங்கிப் போன
குழம்பை
பாதாள கரண்டி
போட்டுத் தேடுவார்கள்
அப்பத்தா இப்போதெல்லாம்
கம்மா மீன் குழம்பு
வைப்பதில்லை
கம்மாயில் பெருகுகிறது
பெருந்திணை குடியிருப்புகள்
என்று தெரியாமல்
கம்மா மீனே
கிடைக்கிறதில்லை என்பாள்
5 comments:
ரொம்ப யதார்த்தம் ராகவன்
கம்மா மீன் குழம்பு வாசம் வருது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
கம்மா மீன் மணக்கிறது, உங்கள் கவிதையிலும்.
நல்லா வந்துருக்கு ராகவன்
கம்மாயில் பெருகுகிறது
பெருந்திணை குடியிருப்புகள்
இங்கும் தோப்புகள் அழிந்து..
பழைய நினைவுகளின் வாசனைகளில்தான் வாழ்க்கை!
அடடே,
அழி வாசனையோடு
கம்மா மீனும் கொதிக்குது.
ஆத்திரத்தோடு
அரசியல் வாசமும்
அடிக்குதே.
Post a Comment