நிறைகுடம்
எதிர்ல வருது
சரியான நேரம் கிளம்புடா...
வடக்க போற
இன்னைக்கு சூலம்
பால குடிச்சிட்டு போ...
வெள்ளிக்கிழமை
திருஷ்டி கழிக்கணும்
குடும்ப மொத்தத்துக்கும்
தவறாமல்
நரிபடம், கழுத படம்
தாத்தாவின் படத்திற்கு
அருகே சிரிக்கும்
எம்புள்ள கலெக்ட்டர் தான்!
மணியடிக்குது பாரு
காரியபலிதம்
லேசா தூறினா
வெளியே கிளம்பக்கூடாது
சுககேடு
ஒத்த பிராமணன் வர்றான்
திரும்பி வந்துடு
ராகுகாலம், எமகண்டம்,
அமிர்த யோகம், குளிகை,
ரோகம்,
பஞ்சாங்கம், கௌரி பஞ்சாங்கம்
என்ற சுப அசுப பொழுதுகளில்
நிரம்புகிறது
அப்பாவின் கடிகாரமும்
நாட்காட்டியும்
சகுனங்களில் துவங்குகிறது
எங்கள் பகல்கள்
முடிகிறது
எங்கள் இரவுகள்
கிழக்க தலைவச்சு படு
துன்னூறப் பூசிக்க
காத்து கருப்பு அண்டாது...
பினம் வருது எதித்தாப்ல
கிளம்புங்க நல்ல சகுனம்
தெருமுனையில்
ஒரு திருமணக் கும்பல்
என் அப்பா என்று
தெரியாமலே...
12 comments:
வார்த்தைகளற்றுத்
திரும்ப வைக்கிறது
இந்தக்கவிதை.
//என் அப்பா என்று
தெரியாமலே...//
தெறிக்குது.
தமிழ்மண வோட்டு பட்டை எங்க பாஸ்?"நாங்கெல்லாம் துட்டு வாங்காம வோட்டு போடுரவுக."
நிதர்சனம்.
அன்பு ராகவன் ,
அழுத்தம் நிறைந்தக் கவிதை ...
சகுனங்களாய் நாம் பார்த்துப் பழகிவிட்ட பல பல நேரங்களும் , இடங்களும் , ஆட்களுமாய் - ஒருநாள் நாமே மாறும்போது ஏற்படும் வலியை கவிதை உணர்த்திச் செல்கிறது .
வாழ்த்துக்கள்
மிகச்சரி ....நானும் அனுபவித்து உள்ளேன் .
உரை ஆகட்டும் கவிதை ஆகட்டும் நீங்கள் தனித்து நிற்கிறீர்கள் .வாழ்த்துக்கள் ராகவன்
அருமையான கவிதை!
நிறைய, நிறைய சகுனங்கள் பார்க்கிறோம், ஒரு நாள் நாமே சகுனமாகி போவோம் என தெரியாமலே.
பேஷ்
அவ்வளாவாக திருப்தி பெற முடியலையே ராகவன்,உங்களின் இந்த கவிதையில்.
இப்படி யாராவது சொன்ன எவ்வளவு கோபம் வரும் ராகவன்...எனக்கும் வருது இதைப் படிச்சவுடனே
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் வந்தனங்களும்!!
காமராஜ்
ஜெரி
வி.பாலகுமார்
ஜெனோவா
பத்மா
அம்பிகா
ரிஷபன்
பாரா ( நன்றிகள் பல பாரா, நான் இன்னும் சூடு சுமக்கும் பூனைதானே பாரா...)
தேனம்மை
அன்புடன்
ராகவன்
அர்த்தமுள்ள சொற்சித்திரம்.
Post a Comment