Saturday, March 06, 2010

யார் காவல் ????!!!

என் வாசலிலே
எப்போதும் கிடக்கும்
அந்த செவலை நாய்க்கு
உணவு வைக்கபோனேன்

குட் வாட்ச் டாக் சார்!
என்றார் எதிர் வீட்டுக்காரர்
எப்படி சொல்றீங்க
என்ற என் கேள்விக்கு

ஒருநாள் நைட்
திருடன் ஒருத்தன் ஏறிக்குதிச்சு
உங்க வீட்டுக்குள்ள போறான்
இது அவனை விடவே இல்லை
அப்ப நீங்க
சென்னைக்கு போயிருந்தீங்க,
நான் என் வீட்டு ஜன்னலில்
இருந்து பாத்துக்கிட்டே இருந்தேன்
என்றார்
கடைசில திருடன் திரும்பி
ஓடிட்டான்

இனிமே இவருக்கும் சோறு
வைக்கணும் போல...

13 comments:

ரிஷபன் said...

பாவம் ராகவன்.. ஆனால் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை..

பத்மா said...

அட்லீஸ்ட் அடுத்த வீட்டில் எதோ நடக்குதுன்னு பார்த்தாரே பாவம் .
dont blame him.
தங்கள் சீரியசான கவிதைகளுக்கு நடுவே இது போல் நகைச்சுவை வரவேற்கதக்கது

Balakumar Vijayaraman said...

:) :)

மதுரை சரவணன் said...

பலர் அப்படிதான். இருந்தாலும் சோறு போடுவது ஓவர். வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

கிரேட் ராகவன்!

:-))))))

சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

விநாயக முருகன் said...

சூப்பர் :) கைகொடுங்க

உயிரோடை said...

எல்லோரும் சொன்னது போல சிரிப்பை வரவழைக்கும் கவிதை. ம்ம் எவ்வளவு நல்ல எண்ணம் அந்த பக்கத்து வீட்டுக்காரருக்கு

Thenammai Lakshmanan said...

ரொம்ப நல்ல பக்கத்து வீட்டுக்காரன் போங்க ராகவன்

vidivelli said...

பாவம் அந்த மனிதன்.......
அசத்திவிட்டீங்களே கடைசியில்....
சுப்பர்

ராகவன் said...

அன்பு நண்பன் ரிஷபனுக்கு,

ரொம்ப நன்றியும் அன்பும், நண்பரே, முடிகிற போது ஒரு முறை பேசுங்கள்.

ராகவன்

ராகவன் said...

அன்பு பத்மா,

இதைச் சொன்ன போது எனக்கும், என் மனைவிக்கும் தாங்கமுடியாத சிரிப்பு...

அன்புடன்
ராகவன்

பாலா said...

over nakkalu aama solli putten

ராகவன் said...

Dear Friends,

Thank you for your wishes and views. Your comments make me stronger and enthusiastic.

i have got my catalysts in you.

Please continue your support and visits.

anbudan
Ragavan