Sunday, March 07, 2010

பெயர்கள்...

முதலின் முதலாய்
சிலேட்டு குச்சியில்
எழுதிய அவளின் பெயர்
ஜெயந்தி என்று இருந்தது

அடுத்து பென்சிலில்
சுவரில் கிறுக்கிய பெயர்
சுசீலா என்றானது

பேனாவில்
சுரண்டி பதித்தது
ரேவதியா சுமதியா
குழப்பமாய்

கன்யாகுமரி
கல்விச சுற்றுலா போனபோது
சங்கில் பொறித்த
பெயர் ஜென்னி

கல்லூரியில், அலுவலில்
பெயர்கள் மாறிக்கொண்டே
வந்தது

கணினியின் கடவுச்சொல்லில்
ரகசியமாய் சிரிக்கும்
அவளின் பெயர்

காலம் தீண்டி
நுரைத்து பொங்கிய முதுமையிலும்
கனவுகளும் தேவதைகளும்
ரகசியமாய் கிசுகிசுப்பது
என் பெயராய்...

13 comments:

அன்புடன் நான் said...

உங்களுக்கு.... கன்னி ராசியா?

கவிதை நல்லாயிருக்கு.

Jerry Eshananda said...

rocky rocks.

காமராஜ் said...

ரெண்டு கவிதையுமே நல்லா இருக்கு.பின்னூட்டம் போடத்தான்
நேரம் லவிக்கவில்லை.

பத்மா said...

அடேங்கப்பா இத்தனையா?நல்ல ரசிகரையா நீங்கள்

ஆடுமாடு said...

ம்ம்ம்... நடத்துங்க!

ரிஷபன் said...

ரகசியமாய் கிசுகிசுப்பது
இப்போது அப்பட்டமாய்..

ஜமாய்ங்க..

பாலா said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmm

உயிரோடை said...

ஒரு வாழ்க்கை நிகழ்வை அழகா சொல்லிட்டீங்க.

பிரியம், நட்பு எல்லாம் அந்த நேரத்தில் தொடர்ந்து தொடர்வது தானே. ஆனா இப்போதும் ஜெயந்தி பெயர் நினைவு இருக்குல அது தான் கிளாஸ்.

அம்பிகா said...

"பெயர்கள்..."

முற்றுபுள்ளி இல்லாமல் இன்னும் தொடரும் என்றுதானே பொருள்?

பா.ராஜாராம் said...

:-)

நல்லாருக்கு ராகவன்.

Thenammai Lakshmanan said...

கமல் பாட்டுத்தான் ஞாபகம் வருது ராகவன் :)

மாதவராஜ் said...

முதுமையையும் கொண்டாடுகிறீர்களே... ராகவன்.
ரசித்தேன்.

ராகவன் said...

Dear and Near Friends,

Thank you for your wishes and love. I could not respond to your comments, as i am totally tied up with some official deliverables. I would like to talk to each and every one of you in person with warmth and priyam.

thank you once again, words are ineffable to express my gratitude and love.

Warm Regards,
Ragavan