வளர்ப்பு மிருகத்தின்
ஓலமாய் இருந்தது
தனித்து விடப்பட்ட
இரவின் அமைதி
பிரிவுக்கான பொழுதுகளின்
துர்கனவுகளில்
விசும்பி அழுகிறது
ஆளற்ற வீடுகள்
அகண்டு விரித்து
தன் முந்தியை
உதறி படுக்கிறது
பிரயாணங்களால்
களைத்த தெரு
வாசிக்காத
புத்தகங்களின்
பெருமூச்சில்
உலர்கிறது
கன்னிமை
உண்மை
பிரிக்கமுடியாது
உறங்கி கழுவிலேற்றும்
கனவுகளின்
மென்படுக்கை
எதுவும் செய்யாது
சும்மா கிடக்குது
இந்த கவிதை
12 comments:
நல்லா இருக்குங்க.
கவிதை எப்படி சும்மா கிடக்கும் ? எங்கள் மனத்தந்தியை அவ்வப்போது மீட்டி இசை பாடிக்கொண்டே இருக்கிறதே?
அற்புதம்.. ஆஹா.. நினைத்துப் பார்க்க முடியாத அளவு.. வார்த்தைகளின் ஜாலம்..
உங்களின் சொல்லாடல் திகைக்க வைக்கிறது என்னை ஒவொரு முறையும். பகிர்வுக்கு நன்றி.
/வாசிக்காத
புத்தகங்களின்
பெருமூச்சில்
உலர்கிறது
கன்னிமை/
கவித்துவமான வரிகள். வாழ்த்துக்கள்
:)
இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணிட்டு
ஒண்ணுந்தெரியாத புள்ள மாதிரி நின்னா
சும்மா விற்றுவமா ?
கொழுப்பு மிஸ்டர், கொழுப்பு ஜாஸ்தி.
//தனித்து விடப்பட்ட
இரவின் அமைதி //
//பிரயாணங்களால்
களைத்த தெரு//
இக்கவிதையின் இடப்பட்ட பட்டியலில் படித்த வரிகள். ரொம்ப வித்தியாசமா நிறைய சிந்திக்கவும் வைத்தவை இவை.
//வாசிக்காத
புத்தகங்களின்
பெருமூச்சில்
உலர்கிறது
கன்னிமை//
இதன் கடைசி வார்த்தை,
வார்த்தையல்ல, நிகழ்வின்
வார்ப்பு.
அன்பு நண்பர்கள்,
அனைவருக்கும் அன்பும் நன்றிகளும்...
அசோக்
செல்வராஜ் ஜெகதீசன் (முதல் வருகை)
பத்மா
ரிஷபன்
இராமசாமி கண்ணன்
ம்துரை சரவணன்
நேசமித்ரன்
லாவண்யா
வாசன்
செ.குமார் (முதல் வருகைக்கு அன்பு)
உங்கள் எல்லோருக்கும் என் வந்தனங்கள் பல...
அன்புடன்
ராகவன்
அன்பு காமராஜ்,
விடுபட்டது, தனியாய் அன்பை சொல்ல என்று நினைக்கிறேன்.
அன்புடன்
ராகவன்
வசீகரமான மொழி. நிச்சயம் சும்மா கிடக்கவில்லை இந்த கவிதை :)
அனுஜன்யா
Post a Comment