இறந்த நகரத்தின்
கோபுரங்கள் வெளியே
துருத்திக்கொண்டு இருந்தன
விரைத்த உடல்களைப் போல
அடுக்கப்பட்டிருக்கும்
சிதிலங்களின் மேல்
நிராசைகளின் துர்வாடை
கசிந்து கொண்டிருந்தன
அகழிகளும், அரண்களும்
பாதுகாத்த வாழ்விடங்கள்
புதைகுழிகளாயின
பெயரற்று பறக்கும் வட்டமிடும்
பறவைகளின்
அந்தகார ஓலம்
ஊழியின் முன்பான
பேரிடியில் பொருந்தின
செவிகிழிக்கும் பேரமைதியில்
அறுந்த ஞாயிறு
குருதிக்கொப்பளிக்க கிடந்தது
பின்மாலையின் அடியில்
4 comments:
Nalla irukku...
அபாரம் என்று சொல்ல முடியல ராகவன்.. நெஞ்சறுக்குது இந்த கவிதை
என்ன சொல்வதென்று தெரியவில்லை... கவிதை நன்றாக இருக்கிறதென்று பாராட்டவா... அல்லது உங்களுக்கு ஆறுதல் சொல்வதா என்று புரியவில்லை...
Post a Comment