Monday, November 08, 2010

மனுஷிகள்...

தலதீபாவளிக்கு
மாப்பிள்ளைக்கு ஒரு பவுன் சங்கிலியாவது
போட வேணாம்?! என்றாள் சுந்தரிபெரிம்மா
பிசையும் கையை பிடித்துக்கொண்டாள்
இப்போ காத்துளையெல்லாம்
புண்ணாப்போச்சு என்று
வேப்பங்குச்சி சொருகி கொள்கிறாள் பெரிம்மா!!

***
ரெண்டு நாளா கஞ்சியே
குடிக்கலையாம்ல இந்த பய
என்று பதறிய அப்பத்தா
பழய சோத்த பிழிஞ்சுவச்சு
பச்ச வெங்காயம் கொடுத்தவ
இந்தா வாரேன்னு போயி
கொண்டு வந்த பனஒலைக்குள்
நுங்கும் இருந்துச்சு

***

ஏடி என்னடி பன்னுதே
சின்னவனுக்கு காயுதாமே உடம்பு
ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகலியா
கசாயம் வச்சுக் கொடுத்தியா
புரியாமல் முழித்தவளை விட்டு
குழந்தையை தூக்கிகொண்டு
இருக்கிற ஒன்றிரண்டு
பாத்திரங்களில் தேடினாள்
ஒத்தவிளக்கு முனீஸ்வரன் கோயில்
போயி துன்னூறு கொண்டு வா
உடம்பெல்லாம் பூசிவிட்டா
காலைல எல்லாம் சரியாப்போவும்

***

8 comments:

'பரிவை' சே.குமார் said...

Munum arumai.
appaththa kavithai classic.

பத்மா said...

படாரென்று அடிக்கும் நிதர்சனம் ..
இதைபோல சிலதை படிக்கும் பொது கொஞ்சம் வாழ்வதில் வெட்கம் வருகிறது ..

அம்பிகா said...

\\இப்போ காத்துளையெல்லாம்
புண்ணாப்போச்சு என்று
வேப்பங்குச்சி சொருகி கொள்கிறாள் பெரிம்மா!!\\
ஹூம்...
இப்படியும் சில தலை தீபாவலிகள்..?
யதார்த்தம்.

க ரா said...

மனுஷிகள் = அன்பு :)

காமராஜ் said...

ராகவன்....

உங்கள் கவிதைகள் படிக்கும்போது கதைகள் கிடைக்கிறது.கதைகள் படிக்கும் போது கவிதைகள் துள்ளுகிறது. ஆமா.அந்த பேஸ்புக் ராகவனும் நீங்கள் தானாமே.

Ashok D said...

அழகு மனுஷிகள் :)

sakthi said...

ரெண்டு நாளா கஞ்சியே
குடிக்கலையாம்ல இந்த பய
என்று பதறிய அப்பத்தா
பழய சோத்த பிழிஞ்சுவச்சு
பச்ச வெங்காயம் கொடுத்தவ
இந்தா வாரேன்னு போயி
கொண்டு வந்த பனஒலைக்குள்
நுங்கும் இருந்துச்சு

அருமை

உயிரோடை said...

பா.ரா அண்ணா நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை ராகவன்