Saturday, October 02, 2010

வேய்ந்த இருள்...

மரணத்தின் நகக்குறிகள்

அழுந்த பதிந்திருக்கும்
கதவுகள் உடையதும்
நீர்க்குமிழ்த்திரைகளினால்
ஆனதுமானது
எனது வீடு

கதவின் வழி வருவதைவிட
சுவர்களின் வழி வருவது
எளிது தான் என்றாலும்
யாரும் முயன்றதில்லை
இதுவரை
எப்போதும் கதவுகள்
மாத்திரமே தட்டவோ அல்லது
தகர்க்கவோ படுகிறது

கதவின் மீதும்,
அழைப்பு மணியின் மீதும்
பதிந்திருக்கும் வருகைக்கான
சிதைந்த காலடித்தடங்களில்
என் முகவரி இல்லை
எனக்கான குறிப்புகள்
எதையும் விட்டுச் செல்லவும் இல்லை

சுவர்களின் வழி
தெரியும் உலகத்தில்
திரிபவர்கள் எனக்கு உறவுதான்
என்றாலும் எனக்கு
அவர்களை அழைத்துப்பேச
அளாவளாவத் தோன்றியதே இல்லை
என் மூதாதையர்களின்
சாயலற்று இருந்தார்கள் என்பதைத் தவிர
வேறு காரணங்களும் இருந்திருக்க வேண்டும்

10 comments:

காமராஜ் said...

அன்பின் ராகவன்.
இரவு பின்னூட்டம் படித்ததிலிருந்தே
மனசு பெங்களூருப்பக்கமாகவே இழுக்கிறது. ஏனென்று விளங்கவில்லை.மூடி மூடிப்போட்ட வர்த்தைகளை,தவிப்பை ஒரு தொடு உணர்வில் கொட்டிவிடுகிற கணமாகவேனும் இருக்கலாம்.அதே கதியில் இயங்குகிறது இந்தக்கவிதை.வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமற்ற உருண்டை உருளுமாமே அதே போல.சமீபத்திய கவிதை எல்லாமே ஒரு பிரிவாற்றாமையை பேசுகிற மாதிரியே தோனுகிறது ராகவன்.கனமாக இருக்கிறது.சுகமாகவும்.புலிக்கதை மாதிரி,திரைப்பாடல்கள் மாதிரி ஜங்கு ஜங்குணு போகிற ஒரு பதிவு தாருங்கள்.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..
வேய்ந்த இருள்...
என்னா அழகான தலைப்புங்க...

ஹேமா said...

எங்களைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாங்களே புறக்கணிப்போம் என்பது என் கருத்து.அதுபோலவே இருக்கு வரிகள்.

மாதவராஜ் said...

கவிதை நல்லா இருக்கு ராகவன். சுவர்கள் என்கிற பதம் குறித்த பொருளை உடைத்து, நீர்த்திரையென்பது அற்புத மொழியும் சிந்தனையும்.

நெருக்கமானவர்களால் அதன் வழியறியவும், நுழையவும் முஇட்யும் இல்லையா?

நானும் வருவேன்.

Deepa said...

Enakkum purigirathe! :)

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லா இருக்கு ராகவன்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லா இருக்கு ராகவன்.

ராகவன் said...

அன்பு நண்பர்கள் அணைவருக்கும்,

சந்தோஷமாய் இருக்கிறது... அம்மை போட்டிருந்த புள்ள 15 நாளு வீட்ட விட்டு வெளியே வராம, மூனு தண்ணி ஊத்தினதுமே கொஞ்சம் தெம்பு வந்தாமாதிரி, வெளியே வந்து சுத்தி சுத்தி பார்த்து எல்லாமே புதுசா தெரியுது. எத்தனை நாளாச்சு எல்லாரையும் பார்த்து, எழுத்தில் முறுக்கும் மீசையும், முன் விழும் முடி இழையை ஒற்றை விரலில் தூக்கிவிடும் அழகும் பார்க்க பார்க்க ரங்கராட்டினமாய் கிறக்கம் வருது...

காமராஜ் தவறுவதில்லை வந்து போக... உலகை புரட்டும் நெம்புகோல்காரர் வந்து தான் நாளாச்சு... சந்தோஷம்.

எல்லோரின் அன்புக்கும் பதிலாய் அன்பும், நன்றியும்.

அன்புடன்
ராகவன்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

உயிரோடை said...

தலைப்பு அருமை. கவிதை எங்கோ இருக்கு எட்டாத உயரத்தில். ஹும்ம்ம்