மாமா தீவாளிக்கு
சீலை எடுத்து தரமாட்டீயலா
அக்காவுக்கு மட்டும் தானா?
சீலையா இல்ல மாமனா?
என்றவரை தாண்டி
தங்கையை முறைக்கும்
அம்மாவின் காதல்
***
சீலையா அடுக்கி
வச்சிருக்கிறேனாம் பீரோல...
கூடப்பொறந்தவனுக்கே பொறுக்கல!
அவன்கெடக்கான்
தீவாளிக்கு ரெண்டு சீலையா
வாங்கிக்கோ என்பார் அப்பா
***
நேர்ச்சைக்கு
அம்மனுக்கு சார்த்த
எடுத்த பச்சைச்சீலையில்
அழகாய் தெரிந்தாள் அம்மா!
***
அம்மாவின்
பழஞ்சீலைகள்
தேன்சிட்டுக்களின் உதிர்ந்த
இறகுகளில் நெய்யப்பட்டவை
விரல்கள் முளைத்து
கிறங்க தலைகோதும்
மழை நேர தேநீராய்
மூளை தொடும் நினைவுகளில்
கை சூம்பி உறங்கும் நான்
***
6 comments:
கவிதை ரொம்ப அருமையா இருக்கு.
//விரல்கள் முளைத்து
கிறங்க தலைகோதும்
மழை நேர தேநீராய்
மூளை தொடும் நினைவுகளில்
கை சூம்பி உறங்கும் நான் //
இதில் லயித்'தேன்'.
arumainne
கடைசி கவிதை நானேதான் ராகவன்.. நன்றி :)
எல்லாமே கலக்கல்.... கடைசி கவிதை அருமையிலும் அருமை...
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு ராகவன்
அம்மா அம்மாதான்
ராகவன் ராகவன் தான் ..
சீலைச்சூடு பரவும் கவிதை
Post a Comment